#Paradox முரண்பாடு போன்று தோன்றும் மெய்யுரை கொழப்பா இருக்குல? அதான் Paradox. #Thread
Paradoxசை டெக்லிக்கலா explain பண்ணணும்னா it is a statement of conclusion that seems self-contradictory but is really true. அதாவது உண்மை பொய் போன்றும் பொய் உண்மை போன்று தோன்றும் ஒரு முடிவிலி. கிட்டத்தட்ட Boy Bestie மாதிரி 😂
இந்த Paradoxகள் நமக்கு ஒன்னும் புதுசு கெடையாது. அந்த காலத்துல பாண்டிய மன்னனே அவரோட Quarantine periodல பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனமுண்டான்னு கேட்டு பரிசு அறிவிக்கலையா? அது மாதிரி தான்.
நம்ம ஊர்ல ரொம்ப பிரபலமான Paradoxன்னா, கோழிலருந்து முட்டை வந்துச்சா இல்ல முட்டைலருந்து கோழி வந்துச்சாங்கறது தான். அதுவுமில்லனா கவுண்டர் மஹானை பொறுத்தவரை அந்த ரெண்டாவது வாழப்பழம் எங்க? 😐
உலகம் முழுக்க பல Paradoxகள் வழக்குல இருக்கு. அதுல மிகப் பிரபலமானது The Lawyers Paradox. என்னோட favouriteம் கூட. சுருக்கமா பாக்கலாம்.
ஒரு Law படித்த மாணவன் ஒரு பிரபல வக்கீல்கிட்ட ஜூனியரா சேர விண்ணப்பிக்கிறான். ரொம்ப பிரபலமான வக்கீல்ங்கறனால அவர்கிட்ட ஜூனியரா சேர பலரும் போட்டிப் போடறாங்க. அந்த மாணவனோட புத்திசாலித்தனத்தாலும் கற்கும் ஆர்வத்தையும் பாத்து அவனை ஜூனியரா சேத்துக்க நினைக்கிறார் வக்கீல்.
பிரச்சனை என்னன்னா அந்த வக்கீல் அவர் மாணவர்கள்கிட்ட குருதட்சணையா ஒரு லம்ப் அமவுண்ட் எதிர்பார்ப்பார். நம்மாளு தான் ஏழைதாயின் மகனாச்சே. அதனால ரெண்டு பேரும் ஒரு டீலிங்கு வந்து அக்ரிமண்ட் போட்டுக்குறாங்க.
அதாவது அந்த மாணவன் அவன் ஜூனியர் பீரியட் முடிஞ்சு அவன் வாதாடப் போற கேஸ்ல ஜெவிக்கிற அமவுண்ட் அத்தனையவும் தட்சணையா வக்கீலுக்கு குடுக்கணும்ங்கறது. நைஷ்ல? 😉
இப்போ சீனியர் இந்த மாணவன முதன்மைபடுத்தி அவர் கத்துக்கிட்ட மொத்த வித்தையவும் அவன் மேல எறக்கி அவனை எதற்கும் அஞ்சானா மாத்தறார். மொத்ததையும் கத்துக்கிட்டு வெளிய வந்து அவன் என்ன காரியம் தெரியுமா செஞ்சான்? 😂
எங்க வாத்திக்கி தட்சணையா நயாபைசா கூட தரமுடியாதுன்னு அவர்மேலயே கேஸப் போடறான். மறுபடியும் நைஷ்ல? 😂
ரெண்டுபேரும் வக்கீலாச்சே, சோ அவங்கவங்க சார்புல அவங்களே வாதாடுறாங்க. வாதாட ஆரம்பிக்கும்போதே இதோட முடிவு இப்படியாதான் இருக்கும்ன்னு ஒரு Proposal ஒன்ன ரெண்டுபேரும் வைக்கிறாங்க.
ஜூனியர் என்ன சொல்றானா, இந்த கேஸோட ரிசல்ட் என்னவா வந்தாலும் அவருக்கு நான் பணம் குடுக்கத் தேவையில்ல. ஏன்னா நான் கேஸ ஜெவிச்சுட்டேன்னா சட்டப்படி பணம்தர வேணாம். அதுவே தோத்துட்டா தரத் தேவையில்ல.
ஏன்னா இது என் முதல் கேஸ். அக்ரிமண்ட் படி முதல் கேஸ் பணம் தானே தரணும். அதுனால கேஸ் ஆரம்பிச்ச இன்னிக்கே இத தள்ளுபடி பண்ணுங்க. மத்தியமே எல்லாரும் மேட்னிஷோ சினிமாக்கு என் செலவுல போலாம்ங்கறான்.
சீனியர் என்ன சொல்றாப்ளனா, இந்த கேஸ் முடிவு என்னவா இருந்தாலும் இவன் எனக்கு பணம் தரணும். ஏன்னா இந்த கேஸ்ல நான் ஜெவிச்சுட்டேன்னா சட்டப்படி பணம் தரணும். தோத்துட்டா அக்ரிமண்ட் படி முதல் கேஸ்ல அவன் ஜெவிச்சதுனால பணம் தரணும்ங்கறார். நைஷ் பவர் 3ல? 😂
இந்த ரெண்டு argumentடயும் கேட்ட அந்த ஜட்ஜய்யா... 😂
இந்த மாதிரி Liar's Paradox Prisoner's Paradox Russell's Paradox Lottery Paradoxன்னு ஒரு டசன் Paradoxகள் இருக்கு. அப்பப்ப பாப்போம். Paradox பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க, தெரிஞ்சுக்கிறேன். #முடிஞ்ச்