"இந்த அறுபத்தேழு பேர்ல யாருக்கு வேலை கிடைத்தாலும், உனக்குலாம் நிச்சயமா வேலை கிடைக்காதுடா" இப்படியான ஆசீர்வாதங்களுடன் தான் 2014 ல் கல்லூரியை விட்டு வெளியேறினேன்.. இந்தப்பேச்சுக்காகவே வேலைக்கு போகனும் ன்னு இரண்டு வாரத்துல ஊரவிட்டு கிளம்பி ஓசூர்..


ஒரு வார சிப்காட் நடைபயணத்திற்க்குப் பிறகு, Manufacturing கம்பெனியில Junior Quality Executive.. மாதம் 9000 சம்பளம்.. அம்மா க்கு சொல்லிட்டு அடுத்த கால் HOD க்கும் Principal க்கும் தான், வேலைக்கு சேர்ந்துட்டேன்னு.. கடுப்பேத்த தான் கால் பண்ணேன், ஆனா அவங்களுக்கு அப்டி ஒரு சந்தோசம்..


கம்பெனியில் Department Manager மும்பைவாலா. அழகான அவர் முகத்த, கழுத்த பிடிச்சு திருப்பிட்டு, வேலைய விட்டு ஊருக்கு ஓடிடலாம்னு தோணுற அளவுக்கு இம்சை பண்ணுவார். சமாளித்து உருண்டு, புரண்டு ஒரு வருடம் முடிந்ததும் வெளிநாட்டு மோகம் தொற்றிக்கொண்டது. வேலையை விட்டுவிட்டு மும்பை பயணப்பட்டேன்.


மும்பை... பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும்,லட்சக் கணக்கான வேலைதேடுவோரையும் கொண்ட நான் நினைத்துப்பார்த்திராத நெரிசலான ஊர்.. லோக்கல் ட்ரெயின் ல் ஏறுவதும், இறங்குவதுமே பெரும் சாதனை.. காலை 8 மணிக்கு certificate file தூக்கிட்டு கிளம்பிட்டா மாலை 4 மணிக்கு தான் ரிட்டர்ன்..


காலை, மதிய உணவுலாம் 2 வடா பாவ் + 2 கரும்பு ஜீஸ், இரவு தான் சோறு. தினமும் 5 - 10 கிலோமீட்டர்கள் தாராளமாக நடந்து திரிவேன்.. மூன்று மாத அலைச்சலுக்கு பிறகு வேலை கிடைத்தது.. அபுதாபி oil refinery ல்... மூன்று மாதம் வேலை, ஒரு மாதம் விடுப்பு.. அபுதாபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில்


ஒரு பாலைவன camp ல் தனியறை.. தனிமை பழகியதும் அவ்விடம் தான்.. QA/QC coordinator. டிபார்ட்மெண்ட் ல் 14 பேர், 13 பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களும் நான் ஒருவனும்.. இர்பான் ஐ தவிர 12 பேரும் 35+ வேறு. அது அறைத்தனிமையே சொர்க்கம் என்று உணரச்செய்யுமளவிற்க்கான அலுவலகத்தனிமை. இர்பான் தான்


அவ்வப்போது ஆறுதலாக இருப்பான். 3 வது ஒரு மாத விடுப்பு முடியும் தருணம் அடுத்த அழைப்பு வரவில்லை, மும்பை அலுவலகத்திலும் சரியான பதில் கிடைக்கவில்லை.. காத்திருக்க மட்டுமே உத்தரவு.. இரண்டு மாதம் கழித்தே இர்பான் கூறினான், இரண்டாம் வருட ஒப்பந்தத்தில் 14 வது நபரும் அவர்களில் ஒருவராக


இருக்கவேண்டுமென்ற பெரிசுகள் அழுத்தம் தான் காரணம்.. காத்திருக்காதே மறுபடியும் தேடு "I'll always remember you in my prayer" ன்னு சொல்லி முடித்தான்.. இப்ப பேசினாலும் கால் கட் பண்ணும் முன்னாடி இப்டித்தான் சொல்லுவான்.. 2017 ன் ஆரம்பம் மறுபடியும் மும்பை.. இரண்டு மாதங்கள் அலைந்தும்


அதே மாதிரியான வேலை கிடைக்கவில்லை, வேறு மாதிரியான வேலைகளுக்கும் மனம் வரவில்லை.. Abroad ன்னாலே oil&gas or refinery வேலைக்கு தான் போகனும் னு ஒரு ஆசை.. அதுதான் எனக்கு பிடித்தமானதாகவும் இருந்தது.. மனவுளைச்சலில் கிளம்பி ஊருக்கே வந்துவிட்டேன்.. பின்னர் கேரளாவில் சிலபல நேர்முகத்தேர்வுகள்


திருவனந்தபுரம் வரை பைக், அங்கிருந்து எர்ணாகுளம் ட்ரெயின். விடியற்க்காலை 2, 3 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் 9 மணிக்கு எர்ணாகுளம். அடுத்த நாள் காலையில் வீடு வந்து சேர்வேன்.. 7 வது முறையாக சென்ற நேர்முகத்தேர்வில் வேலை கிடைத்தது.. சவுதியில் வேலை, சர்வீஸ் சார்ஜ் ஒரு மாத சம்பளம்.


பெரும் தொகையையும், பாஸ்போர்ட் ஐயும் ஒப்படைத்துவிட்டு மெடிக்கல் முடித்து டிக்கெட் ற்க்காக காத்திருக்க அந்த இனிய செய்தி வீடு தேடி வந்தது.. அவர்கள் போலி, உங்கள் பணமும் பாஸ்போர்ட் ம் திரும்ப கிடைக்கப் போவதில்லை என்று.. பிரமாதம். பின்னர் அந்த பாஸ்போர்ட் ஐ தேடி அலைந்து திரிந்து, அதில்


ஸ்டாம்ப் ஆகியிருந்த சவுதி விசா வை கேன்சல் செய்து முடிப்பதற்க்குள் 2017 பாதி முடிந்திருந்தது.பின்பு வீட்டிலும் oil & gas வேண்டாமென்றார்கள். இந்தமுறை வேலைதேடி துபாய் சென்றேன். இரண்டு மாதங்கள் முடிந்து மூன்றாம் மாதம் ஒரு சிறிய கம்பெனியில் (LED supply & installation) வேலை கிடைத்தது.


ஓனர், நான், ஒரு ட்ரைவருடன் கூடிய கார்.. இவ்வளவே கம்பெனி.. தேவைக்கு ஏற்றவாறு வேலையாட்கள் 50, 100 என வெளியில் இருந்து தினக்கூலிக்கு எடுத்துக்கொள்வோம். நல்ல சம்பளம்+3% கமிஷன். ஒரு மாதிரியான Business partner/Manager மாதிரியான வேலை.. மூன்று மாதங்கள் நன்றாக கழிந்த பிறகு சரியாக payment


வரவில்லை.. ஓனரும் payment ஐ நம்பி ஆடம்பர செலவுகளில் தலைக்குமேல் கடனை வாங்கி குவித்திருந்தார்.. ஆறு மாதங்கள் எந்த பணமும் வரவில்லை. ஓனரும் தளர்ந்து விட்டார். படித்த வேலையும் இல்லை, பிடித்த வேலையும் இல்லை, பணமும் இல்லை. ஆறுமாத சம்பளம், பெரும்தொகையான கமிஷன் அனைத்தையும் விட்டு விட்டு


2018ன் செப்டம்பரில் பெட்டியை கட்டினேன் ஊருக்கு.. மீண்டும் நவம்பரில் வேலைதேடி பயணப்பட்டேன்.. இம்முறை கத்தாருக்கு. இரண்டு மாதங்கள் அலைந்து திரிந்து மூன்றாம் மாதம், அதாவது 2019 ஜனவரி 21 ற்க்கு வேலை கிடைத்தது.. அயர்லாந்து நிர்வாகம், நல்ல சம்பளம். MEP QA/QC Engineer. மனம் oil & gas ல்


நிலைகொண்டிருந்தாலும் அப்போதைக்கு அந்த வேலையும் சம்பளமும் பெரும் ஆறுதலாய் இருந்தது.. ஏப்ரல் வரை சுமூகமாக சென்ற வாழ்க்கையில் மீண்டும் Payment problem. அடுத்த மாதம் மொத்தமாய் கிடைத்துவிடும் என ஒவ்வொரு மாதமாய் நகர 2019 ன் நவம்பர் வந்து நின்றது. இந்த முறை ஏழு மாத சம்பளம் (மே-நவம்பர்)


ஒற்றைரியால் கூடகிடைக்கவில்லை கடைசி ஏழு மாதத்தில்.ரோட்ல சும்மா போறவனையும் பிடிச்சு அடிக்கலாம்னு தோனும், அந்தளவுக்கு ஒரு மனநிலையில் பற்களைக்கடித்துக் கொண்டிருப்பேன்.பெரும்தொகை, இதையும் விட்டுவிட்டு, இன்னும் எங்கு செல்ல. ஒரு வாரம் மெடிக்கல் லீவ் அப்ளை செய்துவிட்டு வேறு வேலை தேடினேன்


ஐந்தாம் நாள் வேலை கிடைத்தது. Oil & gas ல் Design ல், நல்ல சம்பளம், பிடித்த வேலை. ஊருக்கு சென்று விட்டு, புதிய விசாவில் வர பணித்தார்கள். ஏழுமாத சம்பளத்தையும் விட்டுவிட்டு ஊருக்கு சென்றேன். 24 நாட்களில் (december2019 ல்) திரும்ப கத்தாருக்கு வந்தேன். Oil & Gas ல் வேலைக்கு சேர்ந்தும்


விட்டேன்.. இன்றுவரை அந்த வேலையில் தான் இருக்கிறேன். இதுவரை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இதுவும் நாளை இல்லாமல் ஆகலாம். மீண்டும் வேறு வேலை தேட நேரிடலாம். பயந்தா பொழப்பு நடத்த முடியுமா மாதிரி தான். பொலம்பிக்கிட்டு வீட்டுக்குள்ள மட்டும் உக்காந்துட மாட்டேன். எங்காவது கிளம்பிவிடுவேன்


ஏதாவது ஒரு வேலையை தேடி கண்டுபிடித்துவிடுவேன். தேடினாதான் கிடைக்கும். "இஞ்சினியரிங் படிடா அதுதான் நம்ம குடும்பத்துக்கு கெளரவம்"னு வீட்ல உசுப்பேத்தி விட்டவனுங்களும் வேலை வாங்கி தரல. "இஞ்சினியரிங் படிடா, அதான் உனக்கு கரெக்டா இருக்கும்" னு சொன்ன என்னவள் என்னை கல்யாணமும் பண்ணிக்கல..


தேடலிலும், விடா முயற்சியிலும் கிடைக்கிற வெற்றியின் ருசிலாம் ஒருவிதமான போதை எனலாம்.. எனக்கு மட்டும் எதுக்கு இப்படியெல்லாம் நடக்குதுன்னு நினைக்கிறது ஒருவிதம். இப்டியெல்லாம் நடக்குதுன்னா எதாச்சும் ஒரு நல்ல காரணம் இருக்குதுன்னு நினைக்கிறது இன்னொரு விதம். நான் இரண்டாவது விதம்.


அதுதான் 2016ல இருந்து 2020 வரைக்கும் என்ன ஓடவச்சது. 2016ல இழந்த oil&gas அ, 2020 ல மறுபடியும் அடைந்ததற்க்கும், இடையில் கடந்த இந்த மோசமான தோல்விகள் தான் காரணம். பிரச்சனைகளே இல்லையேல் இந்த பிடித்தவேலை இன்னமும் கிடைத்திருக்காது. எல்லாம் நல்லதுக்குன்னு நம்புங்க. நம்பிக்கையோட ஓடுங்க.


மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், மாற்றங்களை கொண்டாடுங்கள். மோசமான இன்றைய தோல்விகள்தான் மகிழ்ச்சிக்கான நாளைய காரணிகள் என்று மனதார நம்புங்கள். நன்றி...


Top