Thread, Must Read! இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்பு சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன என இந்தியா டுடேவில் ஒரு கட்டுரை எழுதினார் கட்டுரையை படித்த கலைஞர் உடனடியாக வாஸந்தியை அழைத்து, "தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர்.. (1/5) #Karnan #கர்ணன்


"...எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" என்று குசும்புடன் சொன்னவுடன் துடித்துப் போனார் வாஸந்தி. தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்கவும்... (2/5)


... அவர், "பின்ன என்னய்யா தேவதாசி முறை வேணுமாம்.. ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம்" என்று சொல்லி வாஸந்தியின் புலம்பலை புறம் தள்ளினார் கலைஞரின் விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, ... (3/5)


....சில நாட்களிலேயே தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து ஒரு சிறுகதை எழுதினார். உடனடியாக அவரை அழைத்துப் பாராட்டினார் கலைஞர். பின்னர், தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து,"விட்டு விடுதலையாகி" என்று ஒரு புதினத்தையே படைத்தார் வாஸந்தி... (4/5)


...இன்னும் கொஞ்சகாலம் கழித்து கலைஞர் தேவதாசி முறையை ஆதரிச்சார்னு கூட எவனாவது படம் எடுப்பான். அப்போதும் நாம வாயில் விரல் வச்சு சூப்பிட்டு இருப்போம் (5/5) #Karnan #கர்ணன்


Top