001*கலைஞர் ஒரு முறை திருவாரூருக்கு சென்றிருந்த பொழுது அவர் அக்கா குடும்பத்தினருக்கு தெரிந்த ஒரு தாசில்தார் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.*


002*துக்கம் விசாரிக்கச் சென்ற கலைஞரின் அக்கா குடும்பத்தினர் ஒரு அதிர்ச்சியான தகவல் அறிந்து அக்கா வீட்டுக்கு வந்திருந்த கலைஞரிடம் வேதனைப் பட்டு வருந்தினர்.* *வெள்ளைச் சட்டை போட்டு பந்தாவாக ஜீப்பில் வலம் வந்த தாசில்தார் வீட்டு நிலைமை அன்று அவரை அடக்கம் செய்யக் கூட பணமின்றி


003தவித்ததை கேட்டறிந்து கலைஞர் அதிர்ச்சிக்கு உள்ளானார். அரசு ஊழியர்கள் பலரின் நிலைமையும் அவ்வாறே என அறிந்து உடனடியாக தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு என்ன செய்யலாம் என்று விவாதித்தார். சென்னை திரும்பியவுடன் ஒரு ஆணை பிறப்பித்தார் ( நாள் :01-01-1974)*.


004*அரசு ஊழியர் ஒருவர் பணியிலிருக்கும்போது இறந்து விட்டால் உடன் ரூ 10,000 கொடுப்பது என்றும் அதற்காக மாதம் ரூ 10 பிடித்தம் செய்து கொள்ளலாம் என்பது ஆணை. இது வரை எவ்வளவு பிடித்தம் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் எப்போது இறந்தாலும் இத் தொகை தரப் பட வேண்டும்.


005இந்த ஆணை அமுலுக்கு வந்தது 01/01/974 முதல்.* *09/01/1974 அன்று ஒரு அரசு ஊழியர் இறந்து விட்டார். அவருக்கு 'பணியின் போது உயிரிழந்தால் பத்தாயிரம்' என்ற சட்டம் பொருந்தாது என அதிகாரிகள் சொல்லி விட்டனர்.


006ஏனெனில் மாதம் ரூ 10/- பிடித்திருந்தால் தானே இத்திட்டம் பொருந்தும் என்பது அவரைத் கூற்று.* *அந்த ஊழியரின் மனைவி முதல்வராக இருந்த கலைஞரை சந்தித்து முறையிட்டார். முதல்வர் கலைஞர் அந்த ஏழை குடும்பத்தின் நிலைமையைப் புரிந்து கொண்டு துறை செயலாளரை கூப்பிட்டு சொன்னார்*.


007*அந்த இறந்த உழியர் 9 நாட்கள் பணி புரிந்திருக்கிறார்*. *அவரது 9 நாள் சம்பளத்தில் இந்த ரூ 10/- ஐ கழித்துக் கொண்டு ரூ 10,000/- கொடுக்கச் சொன்னார்*


008*இவ்வளவு சம்பவமும் அந்த ஊழியர் இறந்து 24 மணி நேரத்தில் நடந்து முடிந்து இறந்த ஊழியரின் மனைவியிடம் ரூ 10,000/- அரசு நிதி வழங்கப் பட்டது* *அவரது இந்த சாதுர்யமான நிர்வாகத் திறனையும் மின்னல் போல் செயல்படும் வேகத்தையும் பார்த்து அன்றைக்கு தலைமைச் செயலகமே வியந்து போனது ......*


009*_அது தான் இன்று FBF பிடித்தம்._* அரசு ஊழியர்களின் FBF பிறந்த கதை.🙏


Top