நடிகர் #விவேக் இறந்ததற்கு காரணம் தடுப்பூசியா?இல்லை,என்று திட்டவட்டமாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அவர் இதயத்தில் ஒரு முக்கிய ரத்த குழாய் 100% அடைப்பு ஏற்பட்டிருந்தது.இது ஒரு நாளில் ஏற்பட வாய்ப்பில்லை. Whatsapp இல் வரும் செய்திகளை நம்பாதீர்கள். Covid தடுப்பூசி பாதுகாப்பானது.


உலகெங்கும் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனை செலுத்திக்கொண்டு நலமாக உள்ளனர்.தடுப்பூசிகளால் ஏற்படும் தீவிரமான பக்கவிளைவுகள் அபூர்வமானவை(v. rare).பல கோடி மக்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.சில நூறு நபர்களுக்கு பக்கவிளைவுகள்.அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்துள்ளனர்


நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் பல மருந்துகளைவிட தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் குறைவு. நாம் எப்போதுமே ரிஸ்க் வெர்சஸ் ரிவார்ட் என்று பார்ப்போம் . தடுப்பூசி போடுவதில் அதிக ரிஸ்க் இருக்கிறதா அல்லது Covid நோய் வந்தால் அதிக ரிஸ்க் உள்ளதா?


சந்தேகமே இல்லை . Covid நோய் ஏற்பட்டால் பல,பல மடங்கு அதிக ரிஸ்க் உள்ளது. அதனால் நாம் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளவது அவசியம் . நம் சமூதாய பொறுப்பும் கூட . #Getvaccinated #COVID19India #CovidVaccine #Vivek


Top