அதே (கடை, டெய்லர், வாடகை) => அடிப்படைவாதம் (A long 🧵) இந்த 4 கருத்துகளை மனதில் கொள்ளுங்கள். 1. ஒரு சிறு பிரச்சினையை பெரிதாக்குவார்கள். புரளியை திரும்பத் திரும்பப் பேசி உண்மை பிம்பம் கட்டமைப்பார்கள். 2. அந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் காப்பாளராக ஒரு பிம்பம் முன்னிறுத்தப்படும்.


3. அந்த பிரச்சினைகளுக்கான தீர்வு தூய்மைவாதம் தான் என்ற கட்டமைப்புகள் கொண்டுவரப்படும். 4. போலி அறிவியல் & போலி நம்பிக்கைகள் கொண்டு முட்டுக் கொடுப்பார்கள். இந்த 4ம் ஒருங்கிணைந்த ஒரு டெமப்ளேட்டை எங்காவது கண்டால் உடனே எச்சரிக்கையாகி விடுங்கள். இவை அடிப்படைவாதத்தின் அடிநாதங்கள்


அதற்கு முன் @The_69_Percent, @Greatgo1, @DrNagajothi11 & @esemarr3 ஆகியோருக்கு நன்றிகள். #முச்சந்துமன்றம் நடத்திய "ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்" - @sridharfc அவர்கள் எழுதிய நூல் வாசிப்பை கேட்க நேர்ந்த பின் இதனை எழுத வேண்டும் என உந்துதல் தோன்றியது. வாங்க டாபிக்குள்ள போகலாம்.


நாஜி அமைப்பு 1. பிரச்சனை: யூதர்களை பிரச்சனைக்குரியவர்களாகப் பிரச்சாரம் செய்தனர். 2. பிம்பம்: ஜனநாயகம் வழியே தேர்ந்தெடுக்கப்பட்ட இட்லர் தன்னைக் காப்பாளராக (பிம்பமாக)க் கட்டமைத்துக் கொண்டார். 3. தீர்வு: தூய ஆரியத்தை மீட்டெடுப்பதே தீர்வு என்றார். 4. போலி நம்பிக்கை: அறிவியல் ஆய்வு


என்ற பெயரில் நாஜிகள் யூதர்களை வைத்து நடத்திய ஆய்வுகள் கொடூரமானவை. ஐன்ஸ்டீன் ஆகிய யூத அறிவியலாளர்களை அங்கீகரிக்க மறுத்து சிறு அளவில் இயங்கி வந்த "ஜெர்மானிய/ஆரிய அறிவியல்" (Deutsche Physik) வளர உறுதுணையாக நினறது நாஜி அவர்கள் சார்பியல் போன்ற விதிகளை கடுமையாக

en.wikipedia.org/wiki/Deutsche_…


எதிர்த்தனர். அன்றைய காலகட்டத்தில் அதற்குச் சான்று கிடைக்கவில்லை என்பதற்காக அல்ல. ஐன்ஸ்டீன் ஒரு யூதர் என்ற ஒரே காரணத்திற்காக. அவர்களாக தனிப் பாதை அமைத்துக் கொண்டு இயங்கினர். அதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஸ்டார்க்கும் அடக்கம். ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பின் அது தானாக அழிந்தது.


ஈரான் 'புரட்சி': 1970களின் இறுதி வரையிலும் ஷா மன்னர் ஆட்சியின் கீழ் வெகுவாக வளர்ந்து வந்தது ஈரான். ஜனநாயகம் இல்லை என்றாலும் மேற்கத்தியச் சுதந்திரமும், கல்வியும், அறிவியலும் வெகுவாக வளர்ந்த நாடு. 1. பிரச்சனை: மேற்கத்தியப் பண்பாடு இசுலாமியப் பண்டாட்டிற்கு எதிரானவை என்ற பிரச்சாரம்


தொடர்ந்து எழுந்தது. தமது மதமும் பண்பாட்டும் எதிரிகளால் அழிந்துகொண்டுள்ளன என்ற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டன. 2. பிம்பம்: இந்த பிரச்சினையை வைத்தே ஷியாக்களின் மதத் தலைவர் ஆயத்துல்லாஹ் கொமேனி தனிப் பெரும் அரசியல் தலைவராக உருவெடுத்தார். அவர் மக்களின் காப்பாளனாக பிம்பம் அமைக்கப்


-பட்டன. மக்கள் விட்டில் பூச்சிகளைப் போல் அவரிடம் வீழ்ந்தனர். 3. தீர்வு: ஈரானில் இசுலாமிய மதத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுப்பதே தீர்வு என்றார். 4. போலி நம்பிக்கைகள்: குர்ஆனில் அனைத்திற்கும் தீர்வுகள் உள்ளன & குர்ஆன் அறிவியல் பூர்வமானது என்ற நம்பிக்கைகளை ஆணித்தரமாக நிறுவினார்.


எனினும், மதம் சார்ந்து அறிவியலை அணுகாத சில அறிவியலாளர்களின் முயற்சியால் ஈரான் இன்று பொது நீரோட்ட அறிவியல் / தொழில்நுட்பத்தில் கலந்து வளர்ந்துள்ளது. பின்னர் வந்த ஆட்சியாளர்கள் மத அறிவியலை நிறுவுவதை வெகுவாகக் குறைத்துவிட்டனர். எனினும் மதம் சார்ந்த அறிவியல்

en.symposia.ir/ListScience/SS…


இருந்து கொண்டு தான் உள்ளது. அறிவியலை வேறு வழியின்றி விட்டுவைத்தாலும் மதம் சார்ந்து தான் வங்கியல் நடைபெறுகிறது. இதன் விளைவாக 1979லேயே ஷா பஹ்லவி தூக்கி எறியப்பட்டார். அதன் சமூக வளர்ச்சியும் நசுக்கப்பட்டன. சிந்தனைச் சுதந்திரம் இருந்த அழகான நாட்டை அடிப்படைவாதம் ஆட்சி செய்கிறது.


தாலிபான்: ஷா மன்னர் கால ஈரானைப் போலவே ஆஃப்கானும் பொருளாதாரம், கல்வி & சமூகம் ஆகியவற்றில் இன்றிருப்பதை விட முன்னனியில் இருந்த நாடு. 1. பிரச்சனை: ஈரானைப் போலவே இங்கும் மதத்திற்கும் பண்பாட்டிற்கும் மேற்கத்திய சக்திகளால் ஆபத்து என்ற பிரச்சாரம் கட்டவிழ்கப்பட்டன. 2 தீர்வு: பல குழுக்


-கள் ஆயுதப் போராட்டத்தால் கம்யூனிசத்தை அகற்றி தூய வடிவில் இஸ்லாத்தை மீட்டெடுக்க உறுதி பூண்டன. குர்ஆன்/ஷரியத்தே தீர்வு என முழங்கினர். 3. பிம்பம்: பல குழுக்களாக இருந்தாலும் தாலிபான்கள் தனிப் பெரும் மீட்பராக உருவெடுத்தனர். மீதம் நடந்தவை வரலாற்றுச் சோகங்கள். 4. போலி நம்பிக்கைகள்:


மேற்கத்திய அறிவியலில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை எனினும் "இஸ்லாமிய" அறிவியலில் கூட பெரிதும் ஆர்மின்றி உள்ளனர். எனினும் இஸ்லாமிய வங்கிகள் என மற்ற விசயங்களில் மதத்தைக் கொண்டு முட்டுக் கொடுத்த வண்ணம் உள்ளனர். மத அடிப்படைவாதத்தால் கண் முன் சரியும் நாடு. மீண்டு வர இரு தலைமுறைகள் ஆகலாம்


இந்துத்துவம்: மேற்கண்ட அந்த 4 விசயங்களை அப்படியே இங்கும் பொருத்திப் பார்க்கலாம். 1. பிரச்சனை: ஆப்ரகாமிய மதங்கள் மூலம் இந்து மதத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்ற வாதத்தை தொடர்ந்து வைத்த வண்ணம் உள்ளனர். (இந்தப் புரட்டுகளைத்தான் "ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்" என்ற நூலில்


ஆதாரங்களோடும் தரவுகளோடும் தகர்த்து எறிகிறார் ஆசிரியர்.) 2. தீர்வு: இந்துத்துவம் (தூய சனாதானம்) தான் இந்தியப் பண்பாடு என்று சனாதான மதத்தை மீட்டெடுப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளது. 3. பிம்பம்: இதன் வழியில் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி இந்துக்களின் மீட்பராகத்


தலைவர்கள் உருவெடுத்ததுக் கொண்டுள்ளனர். மக்களும் இந்தப் பிரச்சார வலையில் வீழ்ந்த வண்ணம் உள்ளனர். 4. போலி நம்பிக்கைகள்: "வேத" அறிவியல் என்ற ஒன்றை முன் வைத்து இன்றைய அறிவியல் வேதங்களில் இருந்து திருடப்பட்டவை என்ற வாதங்களை ஆணித்தரமாக முன் வைக்கின்றனர். இதனையும் இந்துத்துவம் சாராத


இந்துக்கள் பலர் முழுமையாக நம்புகிறனர். 'குர்ஆனில் இல்லாத அறிவியலா' என்று எப்படி (அடிப்படைவாதம் சாராத) முஸ்லிம்கள் நம்புகிறனரோ அதுபோல. இந்தப் புள்ளிதான் மிகவும் ஆபத்தானது. இது மக்களை எளிதாக அந்தந்த மதங்களில் மூழ்கவைத்துவிடும். இது மதவாதிகளுக்கு நன்கு பாதை அமைத்துக் கொடுக்கிறது.


நான் கூறிய எடுத்துக்காட்டுகள் சொற்பமானவை. இதே டெம்ப்ளேப்டில் / வழியில் தான் ஆங்காங்கே இனத்தை மீட்டெடுப்பது, மொழியினரை மீட்டெடுப்பது என்று தூய்மைவாதங்கள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி எனில் மக்களுக்கான இயக்கம் எது? தூய்மைவாத/அடிப்படைவாத இயக்கம் எது? எப்படி அடையாளம் காண்பது?


தூம்மைவாத/அடிப்படைவாத இயக்கங்களை இந்த டெம்ப்ளேட்டை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாம். கீழிருந்து மேலே அணுக வேண்டும். 4. நம்பிக்கைகள்: யாரெல்லாம் மீட்டெடுத்தல் என மதம், இனம், சாதியம், முன்னோர்கள் ஆகியவற்றில் இறங்குகிறார்களோ, அங்கேயே எச்சரிக்கை மணி நம் மூளையில் அடிக்கவேண்டும்.


ஏனெனில் இதுவரை மனித வரலாறு பின்னோக்கிச் சென்றது கிடையாது. சாத்தியமும் இல்லை. அப்படிச் சென்றவர்கள் கதி அழிவில் தான் முடிந்தது. அடுத்து 3. பிம்ப மீட்பர்: ஒரு அமைப்பு அல்லது தலைவன் அந்த "பண்டையப் பொற்காலத்தை" மீட்டெடுப்பதே குறிகோள் எனில், விலகிவிடுங்கள். அது கண்டிப்பாகப் புதைகுழி.


அடுத்து 2. தீர்வு: 'உண்மையானத் தீர்வு' என்பது மாயை. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. யாராலும் பிழையே இல்லாத தீர்வுகளை எல்லாம் தர இயலாது. குறைகள் இருந்தே தீரும். அதனை காலப்போக்கில் சரிசெய்து கொண்டுதான் வளர்ந்துள்ளோம். இன்னும் சரியாகச் சொன்னால் ஒரு பிரச்சனையை இன்னொரு பிரச்சினையாக


மாற்றிவிட்டு அதனைத் தீர்வு என நாமாக அழைத்துக் கொள்கிறோம். கடைசியாக 1. பிரச்சாரம்: எங்கு மக்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரம் ஓங்கி ஒலிக்கிறதோ அது அடிப்படைவாதக் கூட்டம். ஆக இந்த 4ம் எங்கு ஒருங்கிணைகிறதோ அங்கே நாம் எச்சரிக்கையாக அணுகவேண்டும். இதனை ஏன் கீழிருந்துமேல் அணுக வேண்டும்


காரணம் மனக்கிளர்வு... போலி அறிவியலை அல்லது போலி வரலாறை அல்லது மற்ற போலி நம்பிக்கைகளை விதைப்பதன் மூலம், மக்களின் மனக்கிளர்வுகளை உருவாக்குவார்கள். நம் மதம் அறிவியல் சார்ந்தது, நம முன்னோர்கள் பெரிய அறிவாளிகள். இப்படி. மனக்கிளர்வின் விளைவு என்ன தெரியுமோ?👇


Frontal lobe மட்டும் வேலை செய்யாது. இந்த frontal lobe எதற்கு? யோசிக்க, கணிக்க, பிரச்சினைகளைத் தீர்க்க.. இப்படி. எல்லா மதச் சங்கிகளும், மொழி, இனத் தூய்மைவாதிகளும் படித்திருந்தும் சிந்தக்க இயலாததற்குக் காரணம் தற்பிதம் காரணமாக மனக்கிளர்வில் வீழ்வது. Frontal lobe வந்துவிடுகிறது. 🙏


* frontal lobe சங்கிகளுக்கும் தூய்மைவாதிகளுக்கும் மனக்கிளர்வால் உறைந்துவிடுகிறது.


Top