கிறிஸ்டியன் ஸ்கூல்ஸ், காலேஜ் பத்தி சமீபத்துல நிறைய விமர்சனங்கள், ஆதரவு பதிவுகள் வந்துட்டே இருந்தது.. சில விஷயங்களை கண்டிப்பா ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.. இதை படிச்சுட்டு, சில பேர் என்னை திட்டக்கூட செய்யலாம்.. ஆனா, உண்மையை தைரியமா சொல்லலாம். ஆம்.. கிறிஸ்தவ கல்விக்கூடங்களில் 1/N


கட்டாயப்படுத்தத்தான் செய்கிறார்கள். எனக்கும் கூட ஒரு மோசமான அனுபவம் இருக்கு. இதை பத்தி, என் நெருங்கிய நண்பர்கள் தவிர யார்கிட்டயும் இதுவரைக்கும் சொன்னது இல்ல நான் படிச்ச முதல் ஸ்கூலே என் ஊர்ல பிரபலமான ஒரு கிறிஸ்டியன் பள்ளிக்கூடம்தான்.. LKG, UKG அங்கேதான் படிச்சேன் (அப்போலாம் 2/N


pre-kindergarten பிரபலம் இல்ல.. இல்லவே இல்லன்னு கூட சொல்லலாம்) நானும், அண்ணனும் ஒரே பள்ளிக்கூடம்.. நான் LKG படிக்கும்போது, அண்ணன் 2ஆம் கிளாஸ். கதறி கதறி அழுது ஸ்கூலுக்கு போன முதல் நாள் அனுபவம் எல்லாம், இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு. அம்மாவை முதன்முதலா பிரியுற கவலை, புதுசா 3/N


பல பேரை பார்க்குற பயம்னு எல்லா குழந்தைகளுக்கும் நடக்குற அதே விஷயம்தானேன்னு உங்களுக்கு தோணலாம் 'ஸ்கூல்ல அண்ணன் கூடவே பத்திரமா இருக்கணும்'னு அம்மா சொல்லி அனுப்பினதால, முதல் 2 நாட்கள் LKG வகுப்பறைக்கு நான் போகவே இல்ல. அழுது அடம்பிடிச்சு, அண்ணன் கூட 2nd Stdல உட்கார்ந்திருந்தேன் 4/N


ஸாரி, தூங்கிட்டு இருந்தேன். மூணாவது நாள் தொடங்குச்சு அந்த கொடுமை.. முதல் 2 நாள் அவ்ளோ அன்பா பேசுன mother, மூணாவது நாள் அடிச்சு இழுத்துட்டு போய் LKG பசங்க கூட உட்கார வெச்சாங்க. எனக்கு விருப்பமே இல்லன்னு தெரிஞ்சும், ஒரு பச்சிளம் குழந்தையாக நான் நிர்பந்திக்கப்பட்டேன் 5/N


ஆம்.. கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் கட்டாயப்படுத்தத்தான் செய்கிறார்கள். நானே சாட்சி.. அது மட்டுமா? UKG படிக்குறப்போ ஒரு வேகத்துல டீச்சரை பார்த்து 'போடி'ன்னு சொன்னதுக்கு, என் டிண்கு பதம் பார்க்கப்பட்டது.. இன்னும் இது மாதிரி எத்தனை, எத்தனையோ சோக கதைகள் 6/N


இருக்கு.. சம்பவங்கள் இருக்கு.. நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்... I stand with சில்ற சங்கீ மாமாஸ். 7/7


Top