கடந்த செப்டம்பர் 1 முதல் திருத்தம் செய்யப்பட்ட டோல் கட்டணத்தால் என்னுடைய 385 கிமீ பயண தூரத்துக்கு 540 ரூபாய் வருகிறது. சராசரியாக கிமீட்டருக்கு 1.42 ரூபாய். இது சில‌ வருடங்களுக்கு முன்பு 1 ரூபாய்க்கும் கீழே இருந்தது. ரூ540 டோல் கட்டணம் மொத்த பயணத்துக்கு ஆகும் செலவில் 21% (1/5)


5வருசத்துல எரிபொருள் விலை 2 மடங்காக மாறிவிட்டது.டீசல் 55 ரூபாயில் இருந்து 94, டோல் 240 ரூபாயில் இருந்து 540ஆக மாறியுள்ளது.ஊருக்கு போய் வர 2500-2800 ரூபாய் ஆனது இன்று 5200ரூபாய் ஆகுது. இது இரண்டு மடங்கு அதிகம், ஆபிஸ் போக டீசல்+டோல் சேர்ந்து 70% ஏறியுள்ளது கடந்த 5வருடங்களில் (2/5)


கார்/பைக் சர்வீசுக்கு 15%VAT &15% சர்வீஸ் டேக்ஸ் இருந்தது ஜிஎஸ்டிக்கு பிறகு இரண்டும் 28%ஆக மாறியுள்ளது. இது கிட்டத்தட்ட இரு‌ மடங்கு. குடும்பத்தை விட்டு தனியாக இருந்து வாரக்கடைசியில் குழந்தைய பார்க்க வாரா வாரம் போகும் நான் இப்ப ஒரு‌வாரம் விட்டு ஒரு வாரம் செல்கிறேன். 3/5


ஒன்றிய‌ அரசு பயணம் மற்றும் அதை சார்ந்த செலவுகளை சொகுசு செலவு என‌ வரையறை செய்துள்ளதால் இது அதிகபட்ச 28% ஜிஎஸ்டியில் வருகிறது.அப்பர் மிடில் க்ளாஸ் மக்களே சமாளிக்க முடியாமல் திணறும் நிலையில் உள்ளனர் மிடில் க்ளாஸ்,ஏழை மக்கள் நிலை இன்னும் மோசம். எப்படி இருந்த நாம் இப்படி ஆகிட்டோம் 4/5


இதெல்லாம் மக்கள் மனதில் எழாமல் உள்ளதா, எல்லாத்தையும் சகிச்சுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோமா? சமூக வலைதளங்களில் கூட யாரும் புலம்புவதில்லை. சாதாரண சர்வீஸ் டேக்ஸ் 15%ல இருந்து 18% ஏறியது ஜிஎஸ்டியில் அதுவே 3% விலையேற்றம் எல்லா சர்வீசுக்கும்‌. எல்லாமே‌ விலையேற்றமே, முடியல😭😭 5/5


Clarification for car/bike service: For service, the Parts attracted 15% VAT and labour charges attracted 15% service tax earlier before GST. Now for parts and labour GST is 28%.


Top